மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை, 16-ஆம் தேதி முதல் சேர்க்கை ஆணையை பதிவிறக்கம் செய்யலாம்.! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான சேர்க்கை ஆணையை வரும் 16 ஆம் தேதி முதல் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சுகாதார துறை தெரிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் 27-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து இணைய வழியில் கடந்த 5-ஆம் தேதி வரை நடைபெற்ற பொதுக்கலந்தாய்வில், 9,723 மாணவர்கள் தங்களுக்கான கல்லூரிகளை தேர்வு செய்தனர். 

இதனையடுத்து மாணவர்கள் தங்களின் இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு சென்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெற்றது. மொத்தம் 6,082 மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுடன் முதல்கட்ட சான்றிதழ் சரிபார்ப்புகள் நிறைவு பெற்றன. சுகாதாரத்துறையின் இணையதள பக்கங்களில் மாணவர்கள் கல்லூரிகளில் தங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டதன் விவரங்களை வரும் 15-தேதி அன்று தெரிந்து கொள்ளலாம் எம்றும், 16-ஆம் தேதி முதல் சேர்க்கை ஆணையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 22-ஆம் தேதிக்குள் மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும் என்றும் அப்படி சேரவில்லை என்ற அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டு சேர்க்கை நடத்தப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Medical admission


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->