வள்ளலார் போற்றிய கீரைகளின் ராணி என்று கூறப்படும் இந்த கீரையில் இவ்வளவு பயனா.?!
KEERAIKALIN QUEEN BENIFITES IN TAMIL
கீரைகளின் ராணி என்று கரிசலாங்கண்ணி அழைக்கப்படும். இதில், இரு வகைகள் இருக்கின்றன. ஒன்று வெள்ளை, மற்றொன்று மஞ்சள். இந்த கரிசலாங்கண்ணிக் கீரையில் பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம், புரதச்சத்து, தங்க சத்து மற்றும் விட்டமின் ஏ உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் அடங்கி இருக்கின்றன.
இந்த கீரையை வள்ளலார் தெய்வீக மூலிகை என்று கூறுவார். இது உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகளை நீக்கி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அத்துடன் வயதான தோற்றம் கொண்டவர்களுக்கு இந்த கீரை இளமையான தோற்றத்தை அளிக்கக்கூடியது.

புற்றுநோய் கிருமிகளை கொன்று சுவாசப் பிரச்சினைகளை சீராக்கும். மேலு,ம் இது கல்லீரலை சிறப்பாக பாதுகாக்கிறது.
தலைமுடி உதிர்தல், பொடுகு தொல்லை மற்றும் பொடுகு பிரச்சனைகள் இருப்பவர்கள் இதை தலையில் அரைத்து பூசலாம். இந்த கரிசலாங்கண்ணிக் கீரையை தைலமாகவும் தயாரிக்கலாம்.
இதை கண் மைக்கும் பயன்படுத்த முடியும். கரிசலாங்கண்ணிக் கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து பொரியல் செய்தோ அல்லது சூப் வைத்தோ சாப்பிடுவது உடலில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
English Summary
KEERAIKALIN QUEEN BENIFITES IN TAMIL