சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுதானிய சப்பாத்தி.!  
                                    
                                    
                                   how to prepare sirudhaniya cappathi 
 
                                 
                               
                                
                                      
                                            சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தாங்களது உணவில் அடிக்கடி சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. 
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - ஒரு கப்
தினை மாவு - ஒரு கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கோதுமை மற்றும் தினை மாவை போட்டு ஒன்றாக முதலில் கலந்து பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து சுமார் அரை மணிநேரம் மூடி ஊற வைக்கவும்.  
பின்னர் பிசைந்த சப்பாத்தி மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திபோல் தேய்த்து, எடுத்து வைத்துக்கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடான பின்னர், தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை போட்டு, சிறிது எண்ணெய்  சுற்றி ஊற்றி வெந்த பின்னர் மீண்டும் திருப்பி போட்டு காயவைத்து எடுத்து கொள்ளுங்கள். 
சுவையான மற்றும் சத்தான தினை கோதுமை சப்பாத்தி தயார்.! 
                                     
                                 
                   
                       English Summary
                       how to prepare sirudhaniya cappathi