பொங்கல் அன்று உபயோகிக்கும் மஞ்சள்கிழங்கு மகிமை பற்றி தெரியுமா? - Seithipunal
Seithipunal


பொங்கல் என்றாலே  கரும்பு  பனங்கிழங்கு மற்றும் மஞ்சள் ஆகியவை தான் நம் நினைவில் வரும். இந்த மஞ்சளானது ஒரு கிழங்கு வகையாகும். இவற்றை நாம் உணவில் வாசனை மற்றும்  கிருமி நாசினியாக பயன்படுத்துகின்றோம். மேலும் மஞ்சள் சில இடங்களில் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளானது பாரம்பரிய  கை மருத்துவத்தில் அதிகமாக பயன்படக்கூடிய ஒரு கிழங்கு.

இந்த மஞ்சளில் புரோட்டின்  கொழுப்பு கார்போஹைட்ரேட் நார்ச்சத்துக்கள் போன்ற சத்துக்களும் ரிபோபிளேவின் தயமின்   நியாஸின் பயோட்டின் ஜியாக்சாந்தின்,லுடீன்  மற்றும் கரோட்டின்களும்  அதிக அளவில் நிறைந்துள்ளன.

மஞ்சளில் இருக்கின்ற குர்குமின்  நம் உடலில் ஏற்படுகின்ற அழற்சி நிலைகளை  கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றாகும் . மேலும் இது கண்களில்  திரும்பித் தொற்றால் ஏற்படுகின்ற கண்
அழற்சி  போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.

மஞ்சளில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள்  
நம் இதயத்தின் நலனுக்கு மிகவும் முக்கியமானவை . இவை  நம் குடலானது  அதிகமான கொழுப்புகளை உறிஞ்சுவதை தடுக்கிறது. மேலும் மஞ்சள்  ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்த உதவுகிறது.

மஞ்சள் ஒரு சிறந்த நுண்கிருமி நாசினி. இதில் இருக்கக்கூடிய குர்குமின் கிருமித் தொற்று  மருந்துகளுடன் சேர்ந்து  நம் உடலில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சியை தடுக்கிறது. இதனால் மஞ்சளானது தோல்  நோய்கள் மற்றும் காயங்கள்  சிறுநீர்ப்பாதை நோய் தொற்றுகள் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

மேலும் மஞ்சளானது தோல் மற்றும் சருமம் சார்ந்த கிருமி தொற்றுகளுக்கு மிகச் சிறந்த மருந்தாகும். மஞ்சளில் இருக்கக்கூடிய குர்குமின்  சர்மம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும்  அவற்றுடன் தொடர்புடைய தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது . மஞ்சள் பேஸ்டை பேசியல் பேக்காக  பயன்படுத்துவதன் மூலம்  முகப்பொலிவு ஏற்படுவதோடு  பற்கள் மற்றும்  உலர் சருமம்  பிரச்சினைகளில் இருந்து தீர்வு காணலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Health benefits of turmeric root


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->