கண் பார்வை சரியில்லையா?! கவலை வேண்டாம்..! இதை செய்யுங்கள் போதும்.!  - Seithipunal
Seithipunal


கண் பார்வையை பாதுகாக்கும் உணவுகள்:

கேரட்,பப்பாளி  கண்களுக்கு நல்லது என்பது எல்லோரும் தெரிந்தது.சர்க்கரை வள்ளி கிழங்கு தினமும்  நமக்கு தேவையான வைட்டமின் A  அளவை விட 200 சதவீதம் அதிகமாக உள்ளது.முலாம் பழத்தில் அதிகமான வைட்டமின் A உள்ளது.கண்ணின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் A உள்ள உணவை உட்கொள்வோம்.

மீன் கண்ணுக்கு நல்லது.அதில் உள்ள ஒமேகா 3  நம் கண்ணில் கண்ணீரின் சுரப்பிற்கு உதவுகிறது. மீன்  கண் உலர் நோய் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த உணவு.

வைட்டமின் சி சத்துள்ள பழங்களான ஆரஞ்சு, திராட்சை,எலுமிச்சை,நெல்லிக்காய்,மேலும் குடைமிளகாய்,தக்காளி போன்ற உணவு பொருட்களில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் நம் கண்ணை பாதுகாக்கிறது.

பாதம்பருப்பு சாப்பிடுவதால்  அதிலுள்ள வைட்டமின் E  நம் கண்ணில் உள்ள செல்களை பாதுகாக்கிறது.

பீன்ஸ் மற்றும் சிறு தானியங்களில் உள்ள ஜிங்க் ( Zinc) நம் கண்களின் விழித்திரையை பாதுகாக்கும்.

முட்டையில் உள்ள Zinc,Lutein and Zeaxanthin போன்ற Antioxidant நம் கண்களை பாதுகாக்கும் சிறந்த உணவு.
மேல் கண்ட  மூன்று சத்துப் பொருட்களும் பச்சை கீரை காய்கறிகளில் உள்ளது.

ஆரோக்கியமாக நல்ல கண் பார்வையுடன்  வாழ துரித உணவை தவிர்க்கவும்.

மேற்கூறிய ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்டால் கண் புரையை தள்ளிப் போடலாம்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eye production foods


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->