குழந்தையின்மை பிரச்சினைக்கு மருந்து, மாத்திரைகளை விட முக்கியமானது இது தான்.! இப்போதே துவங்குங்கள்.! - Seithipunal
Seithipunal


உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் இருந்தால்தான் பெண்களுக்கு கருவுறுதலில் எந்த தாமதமும் ஏற்படாது. எனவே, தான் மருத்துவர்கள் அவர்களுக்கு உடற்பயிற்சியை பரிந்துரைக்கிறார்கள். 

பொதுவாக உடற்பயிற்சி செய்யும் போது நமது BMI கட்டுக்குள் இருக்கும். இதனால் ஆற்றலை சமநிலையில் வைத்துக்கொள்ள இது உதவும். எனவே, கருத்தரித்தலை இது மேம்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

உடல் ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் இருப்பது பெண்களை கருத்தரிக்க உதவும். யோகா, நடை பயிற்சி, நீச்சல், நடனம் போன்ற மிதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. இதனால் உடல் எடை கட்டுக்குள் இருப்பது மட்டுமல்லாமல் குழந்தை தரிப்பதற்கு நிறைய வாய்ப்புகளை அதிகரிக்கிறது. 

சமீப காலமாக குழந்தையின்மை பிரச்சினைக்கு பிசிஓடி மற்றும் பிசிஓஎஸ் என்ற பிரச்சினைகளைத் தான் மருத்துவர்கள் காரணம் காட்டுகின்றனர். எனவே, சுறுசுறுப்பாக உடல் இயங்க கர்ப்பகால நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட சிக்கல்களை ஏற்படுத்துவதை இந்த உடற்பயிற்சிகள் குறைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

அத்துடன் உடற்பயிற்சி செய்தால் இது மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதாகவும், இதனால் உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டுமே சமமாக பலன் கொடுக்கும் என்பதால் விரைவில் பெண்கள் கருத்தரிக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

exercise may help to getting baby


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->