பேரிச்சம் பழம் சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்தா! எச்சரிக்கை! பேரிச்சம் பழம் 'இப்படி' இருந்தா சாப்பிடாதீங்க.. உடல்நல பிரச்சனைகள் வரும்! - Seithipunal
Seithipunal


உடல்நலத்திற்கு அற்புத நன்மைகள் வழங்கும் பேரீச்சம்பழம், சரியாக சரிபார்க்காமல் சாப்பிட்டால் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை உண்டாக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பேரீச்சம்பழத்தில் ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற தாதுக்கள் அதிக அளவில் உள்ளதால், செரிமானத்தை மேம்படுத்துவது, இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பது, எடை குறைக்க உதவுவது, புற்றுநோய் அபாயத்தை குறைப்பது உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கின்றன. இதனால் தினமும் குறைந்தது இரண்டு பேரீச்சம்பழம் சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஆனால் அதே நேரத்தில், பேரீச்சம்பழத்தில் பூஞ்சைகள் (fungus) உருவாகும் அபாயமும் உள்ளது. அதிக சர்க்கரை மற்றும் ஈரப்பதம் கொண்டிருப்பதாலேயே இதில் பூஞ்சைகள் விரைவில் வளரக்கூடும். குறிப்பாக, கருப்பு, வெள்ளை, சாம்பல் அல்லது பச்சை நிற புள்ளிகள் பழத்தின் மேற்பரப்பில் அல்லது உள்ளே காணப்பட்டால், அதை ஒருபோதும் சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், துர்நாற்றம் அல்லது புளித்த வாசனை வீசினாலும், அது கெட்டுப்போனதற்கான அறிகுறி.

பூஞ்சை சேர்ந்த பேரீச்சம்பழம் சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற குடல்நோய் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் அதிகம். எனவே, பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதற்கு முன் அதை இரண்டு துண்டுகளாக வெட்டி உள்ளே பூஞ்சை உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.

நிபுணர்கள் வலியுறுத்துவதாவது –
 சாப்பிடும் முன் கண்டிப்பாக சரிபார்க்க வேண்டும்
 புள்ளிகள், துர்நாற்றம் இருந்தால் தவிர்க்க வேண்டும்
 பூஞ்சை பாதித்த பேரீச்சம்பழம் உடல்நல அபாயங்களை உருவாக்கும்

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Eating dates is certain death Warning If the dates are like this eat them you will have health problems


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->