யோகா செய்ய நேரமில்லையா?..! இனி அலுவலகத்தில் இருந்தே செய்யும் சில ஈசி யோகா..!! - Seithipunal
Seithipunal


தினமும் யோகா பயிற்சி செய்வதன் மூலம் நமது உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும். சிலர் அலுவலகத்தில் வேலை செய்வதால் யோகா செய்வதற்கு நேரம் ஒதுக்க முடியாது. அவர்கள் ஓய்வு நேரங்களில் 10 நிமிடங்களில் செய்ய கூடிய எளிமையான ஆசனங்களை செய்யலாம்.

சித்தாசனா: இரண்டு கால்களையும் மடக்கி  உட்கார்ந்து இரு கைகளையும் மூட்டியின் மீது வைத்து கண்களை மூடி தியானம் செய்யுங்கள். இப்படி செய்து வந்தால் இடுப்புப் பகுதி மற்றும் தொடைகளில் உள்ள தசைகள் வலுவாகி, நெகிழ்வுத்தன்மையைப் பெறும் மற்றும் மனதை அமைதிப்படுத்தும்.

பிறை நிலா யோகாசனம் : அலுவலகத்தில் இருக்கும் போது நாற்காலியில் அமர்ந்த படியே இந்த ஆசனத்த நாம் செய்யலாம். நாற்காலியில் அமர்ந்த படி மூச்சை உள்ளிழுக்கும் போது, கைகளை மேற்புறமாக தூக்கி, உடலை முன்புறமாக வளைக்கவும். மூச்சை வெளிவிடும் போது, கைகளை கீழே கொண்டு வந்து, உடலை நேராக்கவும். இதனை 10 முதல் 20 முறை வரை செய்யலாம்.

பின்புறமாக வளையும் யோகாசனம் : இந்த ஆசனம் செய்ய, இரண்டு பாதங்களையும் நன்றாக ஊன்றி நாற்காலியில் அமரவும். முதுகும், தண்டுவடமும் நேராக இருக்க வேண்டும். இப்போது முன்புறமாக குனிந்து, அதே நேரத்தில் உங்கள் கைகளை பின்புறமாக நீட்டிக்கவும். பின்னர் பின்புறமாக நீட்டப்பட்ட கைகள் உங்கள் நாற்காலியை பிடித்துக் கொள்ள வேண்டும். இதனால் உங்க தண்டுவட பகுதிகளை வலுப்படுத்தும்.

எண் நான்கு யோகா : நாற்காலியில் நுனியில் நேராக அமரவும். உங்கள் தோள்பட்டையை முன்னும் பின்னுமாக சுழற்றி, ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். உங்கள் இடது கால் தரையில் நன்றாகப்படுமாறு அமர்ந்து கொள்ளுங்கள். வலது காலை தூக்கி, வலது காலின் குதிகால், இடது தொடையின் மீது இருக்குமாறு வைக்கவும்.

ஆழமாக, உங்கள் அடிவயிற்றிலிருந்து மூச்சை இழுத்து விடுங்கள். சில நிமிடங்கள் இந்த நிலையில் அமர்ந்து, கால்களை மாற்றி மறுபடி செய்யவும்.மன அழுத்தம் ஏற்படுவதற்கு உடல் சோர்வும் ஒரு காரணமாக இருக்கும். இந்த ஆசனத்தை செய்வதால் உடல் சோர்வு நீங்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Easy yoga doing in the office


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->