மாத்திரைகளை டீ, காபியில் போட்டு விழுங்கினால் என்னவாகும் தெரியுமா? - Seithipunal
Seithipunal


மாத்திரைகளை வாயில் போட்டு தண்ணீர் குடித்து விழுங்குபவர்கள் உண்டு. இன்னும் சிலர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொண்டு மாத்திரைகளை போடுவார்கள்.

சிலர் எதையும் போடாமல் வெறும் மாத்திரையை வாயில் இட்டு கசப்பு இருந்தாலும் சப்பி கரைத்து விழுங்குவார்கள்.

இன்னும் சிலர் காபி, டீ, பால், குளிர்ந்த நீர் என்று எது கிடைத்தாலும் அதில் மாத்திரை போட்டு கொள்வார்கள். ஆனால் இவை எல்லாமே தவறான முறையே.

பால் வாடை விரும்பாதவர்கள், மாத்திரைக்கு தனியாக தண்ணீர் குடிக்க வேண்டுமே என்று நினைப்பவர்கள் பாலுடன் மாத்திரைகள் எடுத்து கொள்ளும் போது பாலில் இருக்கும் புரதமும், கால்சியமும் மாத்திரையில் இருக்கும் மருந்தின் வீரியத்தை குறைத்து வேலை செய்ய விடாமல் தடுக்கக்கூடும்.

இதனால், மருந்தில் இருக்கும் சத்துக்களை உடல் உறிஞ்சி கொள்ள முடியாமல் உடல் கழிவோடு மருந்தையும் வெளியேற்றும்.

தலைவலி மாத்திரையை கூட காபியோடு எடுத்து கொள்ளும் வழக்கம் பலருக்கும் உண்டு. இது மிக தவறான முறை. காபியில் இருக்கும் காஃபின், மாத்திரைகளுடன் வினைபுரிந்து மாத்திரையில் இருக்கும் சத்துக்களை உடலுக்குள் சேராமல் தடுத்து விடும்.

காபியில் மாத்திரை போடாவிட்டால் என்ன, மாத்திரைக்கு பிறகு காபி குடித்தால் போதும் என்பவர்கள், அதையும் தவிர்க்க வேண்டும்.

மாத்திரைகளை எடுத்து கொள்வதற்கு முன்பும் மாத்திரைகள் எடுத்து கொண்ட பின்பும் குறைந்தது ஒரு மணி நேரமாவது இடைவெளி இருக்க வேண்டும்.

மாத்திரை விழுங்க சரியான முறை :

மாத்திரைகளை உட்கொள்ளும் போது எந்த மாத்திரையாக இருந்தாலும் நீங்கள் வாய் நிறைய தண்ணீரை நிரப்பி அதில் மாத்திரையை போட்டு விழுங்குவதுதான் சரியான முறை ஆகும்.

அப்படி செய்யும் போது மாத்திரை எங்கும் தடையில்லாமல் உணவுக்குழாயில் செல்லும். மாத்திரையை விழுங்கிய பிறகும் மீண்டும் 250 மில்லி அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

குளிர்ந்த நீரில் குடிக்கும் போது மாத்திரை செயல்படும் நேரம் தாமதமாகும். இயன்றவரை வெதுவெதுப்பான நீரில் மாத்திரை எடுத்துக்கொள்வது சரியானது.

குழந்தைகளுக்கு கொடுக்கும் போது மாத்திரையை பொடித்து வெதுவெதுப்பான நீரில் கலந்து அல்லது தேனில் குழைத்து கொடுக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do you know what happens if you put the pills in tea or coffee and swallow them


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->