குழந்தைகளுக்கு கூல்ட்ரிங்ஸ் கொடுக்கலாமா?
cool drings benefit
கோடை காலம் வந்தாலே மக்கள் ஐஸ் வாட்டர், கூல்ட்ரிங்ஸ் குடிப்பதை பழக்கப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால், இந்தக் குளிர் பானங்களை குழந்தைகளுக்கு கொடுப்பதால் உடலுக்கு சில கெடுதல் உண்டாகும். அவை என்னென்ன என்பது குறித்துக் காண்போம்.
* குளிர் பானங்களில் அதிக அளவு சர்க்கரை உள்ளது, இது குழந்தைகளின் எடையை விரைவாக அதிகரிக்க வழிவகுக்கும். அதுமட்டுமல்லாமல், குழந்தையின் கல்லீரல் பாதிக்கப்படும்.
* குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிப்பதால், ஞாபக மறதி ஏற்படும்.
* குளிர்பானங்கள் குடிப்பதால் குழந்தைகளின் வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருக்கும். இதனால் பசி இழப்பு ஏற்படும்.
வயிறு தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படும்.
* குளிர் பானங்கள் அமிலத்தன்மை மற்றும் அதிக சர்க்கரை கொண்டவை. இது குழந்தைகளின் பற்களை சேதப்படுத்தும்.
* குளிர் பானங்களில் உள்ள காஃபின் காரணமாக குழந்தைகளுக்கு நீரிழப்பு ஏற்படும். உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உறிஞ்சுவதை தடுக்கும்.