இந்தியாவில் இளம் பருவத்தினரிடையே ஏற்படும் உயிரிழப்புகளுக்குப் ஒரு முக்கிய காரணியாக புற்றுநோய் உருவெடுத்துள்ளது; ஆய்வில் அதிர்ச்சி தகவல்..! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினரிடையே ஏற்படும் உயிரிழப்புகளுக்குப் புற்றுநோய் ஒரு முக்கிய காரணியாக உருவெடுத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சர்வதேச அளவில் புகழ்பெற்ற 'தி லான்செட்' மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ள 'சுமையாகும் உலகளாவிய நோய்கள் - 2023' ஆய்வின் முடிவுகள் இதனை உறுதிபடுத்தியுள்ளன.

இந்தியாவில் 05 முதல் 19 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் உயிரிழப்புக்குக் காரணமாக அமையும் பத்து முக்கியக் காரணிகளில் புற்றுநோய் இடம்பெற்றுள்ளது. அதில் குறிப்பாக ரத்தப் புற்றுநோய், மூளைக்கட்டிகள் மற்றும் நிணநீர் சுரப்பி புற்றுநோய் போன்றவை இந்தியச் சிறுவர்களிடையே அதிகம் காணப்படுவதாக குறித்த ஆய்வில் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு புற்றுநோய் பாதித்த பல சிறுவர்களுக்குச் சரியான நேரத்தில் நோய் கண்டறியப்படாததும், சிகிச்சையைப் பாதியிலேயே நிறுத்துவதும் தான் உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள் என கூறப்படுகிறது. குழந்தைகளிடையே புற்றுநோய் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் குணமடையும் விகிதத்தை அதிகரிக்க முடியும் என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து மாநில மற்றும் மாவட்ட அளவில் பிரத்யேக குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை மையங்களை விரிவுபடுத்த வேண்டியது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன், புற்றுநோய் என்பது குணப்படுத்தக்கூடிய ஒரு நோய் என்ற விழிப்புணர்வைப் பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்றும், தொற்றுநோய்களைக் காட்டிலும் இத்தகைய தொற்றாத நோய்களின் தாக்கம் வளர்ந்து வரும் நாடுகளில் அதிகரித்து வருவது பொதுச் சுகாதார வல்லுநர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து செயல்படுவதன் மூலம் மட்டுமே இந்த அபாயத்தைக் குறைத்து, வளரும் தலைமுறையினரின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய முடியும் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cancer has emerged as a leading cause of death among adolescents in India a shocking revelation from a recent study


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->