உடல் சொல்லும் மௌன எச்சரிக்கை… கொழுப்பு அதிகரிப்பின் ஆபத்தான அறிகுறிகள்!
body silent warning dangerous signs increased cholesterol
உடலுக்கு கொழுப்பு அவசியம் தான். ஆனால் அதே கொழுப்பு அளவுக்கு மீறி சேரும்போது, அது உயிருக்கும் ஆபத்தாக மாறிவிடும். குறிப்பாக “எல்.டி.எல்.” எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு 100-க்குள் இருக்க வேண்டியது மிக அவசியம். இதைத் தாண்டினால், மாரடைப்பு, பக்கவாதம், இரத்த நாள பாதிப்பு போன்ற உயிர்க்கு ஆபத்தான நோய்கள் கதவுத்தட்ட ஆரம்பித்துவிடும்.ஆச்சர்யம் என்னவென்றால், கொழுப்பு அதிகரிக்கும் போது உடல் முழுவதும் அல்ல, சில குறிப்பிட்ட உறுப்புகள் மட்டுமே முதலில் எச்சரிக்கை மணி அடிக்கத் தொடங்கும். அந்த அறிகுறிகளை சரியான நேரத்தில் கவனித்தால், பெரிய பிரச்சனை வருவதற்கு முன்பே தடுக்க முடியும்.

கால் வலி & தசை பிடிப்பு – முதல் எச்சரிக்கை
உடலில் கொழுப்பு அதிகரித்தால், முதலில் பாதிக்கப்படுவது கால்கள். ரத்த ஓட்டம் குறைவதால் நடக்கும் போதும், ஓய்வெடுக்கும் போதும் கால்களில் வலி, தசை பிடிப்பு, சுளுக்கு போன்றவை தோன்றும். இது சாதாரண சோர்வு அல்ல — ரத்த நாள்களில் கொழுப்பு அடைப்பு தொடங்கியிருப்பதற்கான அறிகுறி.
மார்பு வலி & அழுத்தம் – இதயத்தின் SOS சிக்னல்
மார்பில் இறுக்கம், எரிச்சல், கனத்த உணர்வு தோன்றினால் அதை எளிதாக புறக்கணிக்கக்கூடாது. இதய தமனிகளில் கொழுப்பு தேங்கும்போது, இதயத்திற்கு போகும் ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இது மாரடைப்புக்கான முன்அறிகுறியாகவும் இருக்கலாம்.
கழுத்து, தாடை, தோள்பட்டை வலி – ரத்த ஓட்ட தடை அறிகுறி
கொழுப்பு அதிகரிக்கும் போது, கழுத்து, தாடை மற்றும் தோள்பட்டையில் விசித்திரமான வலி ஏற்படலாம். முழு உடலின் ரத்த ஓட்டமும் பாதிக்கப்படுவதால், இந்த பகுதிகளில் தொடர்ச்சியான சுளுக்கு அல்லது கனத்த வலி தோன்றும்.
மற்ற எச்சரிக்கை அறிகுறிகள்
கைகள், கால்களில் உணர்வின்மை, கூச்ச உணர்வு, குளிர்ச்சி
கால்களின் நிறம் மாறி நீலமாகத் தோன்றுதல்
அடிக்கடி தலைச்சுற்றல், தலை பாரமாக இருப்பது
படிக்கட்டுகள் ஏறும்போது மூச்சுத் திணறல், விரைவான சோர்வு
கண்களைச் சுற்றி மஞ்சள் வளையம் அல்லது மஞ்சள் கட்டிகள் தோன்றுதல்
இவை அனைத்தும் உடலில் கொழுப்பு அபாய அளவுக்கு உயர்ந்திருப்பதற்கான மௌன எச்சரிக்கைகள்.
முக்கிய அறிவுரை
உடலில் இதுபோன்ற மாற்றங்கள் தோன்றினால், அதை அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். சரியான பரிசோதனை, சரியான உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் மூலம் கொழுப்பை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
English Summary
body silent warning dangerous signs increased cholesterol