மணத்தக்காளி கீரை: ஒரு பச்சை இலையில் உங்களுக்கான hidden ஆரோக்கிய ரகசியம் என்ன...?
Black nightshade greens What hidden health secret does this green leaf hold you
சத்து மற்றும் மருத்துவப்பயனில் செல்வாக்குள்ள மணத்தக்காளி கீரை தமிழ்நாட்டின் தெருக்களில், சந்தைகளில் மிகவும் விரும்பத்தக்க வகையாக விற்கப்படுகிறது. குறிப்பாக, தற்போதைய உணவுப் பழக்கங்களில் இதை அடிக்கடி சேர்ப்பது அவசியமாகும். பாரம்பரிய காட்டு கீரை வகைகளில் ஒன்றான மணத்தக்காளி கீரை, சித்தி மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பிரபலமாகப் பயன்படுகிறது; செரிமானக் குறைபாடுகள், வயிற்றுப் புண்கள், அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு இது இயற்கையான தீர்வாக கருதப்படுகிறது.

இதன் சிறிய கருப்பு பழங்களும், பச்சை இலைகளும், உடலுக்கு அவசியமான பல உயிர் சக்திகளை வழங்குகின்றன. வயிற்றுக் கோளாறுகள் மட்டுமல்ல, தோல் சம்பந்தமான நோய்கள்
மேலும், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் செயல்பாடு ஆகியவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது.மணத்தக்காளி கீரை சளி, இருமல், கண் புரை போன்ற சுகாதாரப் பிரச்சனைகளையும் தவிர்க்க உதவுகிறது. சித்தர்கள் பரிந்துரைக்கும் விதமாக, இதனை பயத்தம்பருப்புடன் வேகவைத்து, மென்மையாக மசித்து உண்பது சிறந்தது.
இந்த கீரை ஆன்டி ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள் A, C, E, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற முக்கிய சத்துக்களால் நிறைந்தது.மணத்தக்காளி கீரையின் தனிச்சிறப்பு இதை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது: பெண்களின் கருப்பை வலுப்படுத்துவதிலும், உடல் சக்தியை மேம்படுத்துவதிலும் இதன் முக்கிய பங்கு உண்டு.
100 கிராம் மணத்தக்காளி கீரையில் நீர்ச்சத்து 82%, புரதம் 5.9 கிராம், ரிபோபிளாவின் 59 மி.கி., நியாசின் 0.9 மி.கி. போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
நாட்டுக்கீரைகள் மனிதர்களுக்கு அவசியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குவதோடு, நோய்கள் உருவாகாமல் தடுக்கும் இயற்கை மருந்தாகவும் செயல்படுகின்றன. உலகளவில் தற்போது உள்நாட்டு கீரைகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவது அதனால் தான்.
English Summary
Black nightshade greens What hidden health secret does this green leaf hold you