மூட்டு வலிக்கு முக்கிய மருந்தாக பயன்படும் வெள்ளை மஞ்சளின் மருத்துவ பயன்கள்.! - Seithipunal
Seithipunal


உடல் ஆரோக்கியத்திற்கும் சரும பிரச்சனைகளுக்கும் மஞ்சள் முக்கிய மருந்தாக பயன்படுகிறது. அந்த வகையில் வெள்ளை மஞ்சளின் மருத்துவ பயன்களை இந்த பதிவில் நாம் காணலாம்.

பெரும்பாலும் நாம் மஞ்சளை மஞ்சள் நிறத்தில் தான் பார்த்திருப்போம். வெள்ளை மஞ்சள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்த வகை மஞ்சள் இந்தியாவில் தான் அதிகப்படியாக பயிரிடப்படுகிறது.

வெள்ளை மஞ்சள் கிழங்கு சற்று இஞ்சியின் சுவையை கொண்டிருக்கும். இந்த வகை மஞ்சள் உடலில் ஏற்படும் மூட்டு வலியை குணமாக்க சிறந்த வலி நிவாரணியாக பயன்படுகிறது.

அந்த வகையில் உடலில் தேவையற்ற திரவங்கள் சேர்வதால் ஏற்படும் மூட்டு வலி மற்றும் உடல் வலியை குணப்படுத்துகிறது. மேலும், இந்த மஞ்சளில் உள்ள குர்க்குமினால் உடலில் உள்ள காயங்கள் குணமடைய உதவுகிறது.

அது மட்டும் இல்லாமல் உடலில் ஏற்படும் அலர்ஜி காரணமாக ஏற்படும் ஆஸ்துமா மற்றும் உடல் வலியை விரட்டுகிறது. குறிப்பாக பசியின்மை, வயிற்றுப் பூச்சி, வாயு, மலச்சிக்கல் உள்ளிட்ட அனைத்து செரிமான கோளாறுகளுக்கும் வெள்ளை மஞ்சள் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. குறிப்பாக இந்த மஞ்சள் நீரை குடித்து வந்தால் மார்பக மற்றும் வயிறு சார்ந்த புற்றுநோய் ஏற்படும் பாதிப்பை குறைப்பதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits of white turmeric


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->