சிகப்பு அரிசியை சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?. எப்போது சாப்பிடுவது நல்லது?.!
Benefits of Red Rice Health Tips
சாதாரண அரிசியை விட சிவப்பு அரிசி விலை அதிகம். இந்த விலைக்கு காரணமாக அதில் உள்ள பல சத்துக்களை நாம் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும். சிகப்பு அரிசியை புட்டு, சத்தம், கஞ்சி, களி போன்றவற்றை செய்து சாப்பிடலாம்.
சாதாரண அரிசியில் அதிகளவு கார்போஹைட்ரேட் இருக்கும். இதனை சர்க்கரை நோயாளிகள், உடல் பருமன் பிரச்சனை இருக்கும் நபர்கள் சாப்பிட கூடாது. சிவப்பு அரிசியை சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

உடல் எடையை குறைக்கும் நபர்களுக்கு, சிகப்பு அரிசி பெரும் உதவி செய்கிறது. அதில் உள்ள நார்சத்து காரணமாக, உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகள் குறையும். சிவப்பு அரிசி புற்றுநோய்க்கு எதிராகவும், புற்றுநோய் கிருமிகளுக்கு எதிராகவும் போராடும்.
எலும்புகளை நன்கு வலுப்படுத்தும் தன்மையும், தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. தலைமுடி வளர்ச்சியில் சிகப்பு அரிசி பெரும் உதவி செய்கிறது. சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்கிறது.

இதனைப்போன்று கல்லீரலை சுத்தம் செய்து நமது உடலை பாதுகாக்கிறது. சிவப்பரிசியில் இருக்கும் புரதசத்து உடலின் சீரான இயக்கம் மற்றும் பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் செல்வதை உறுதி செய்கிறது. இதனை காலை உணவாக எடுத்து கொள்வது உடலுக்கு நல்லது.
Tamil online news Today News in Tamil
English Summary
Benefits of Red Rice Health Tips