பருத்தி பாலில் உள்ள மருத்துவ குணங்கள்.!!
benefits of paruthi milk
பருத்தி பாலின் மருத்துவ குணம்:
மனித வாழ்வின் தொடக்கமும், இறுதியும் பாலில் தான். தாய்ப்பாலுக்கு பிறகு விலங்குகளின் பால், விதைகளில் இருந்து பெறப்படும் பால் என தனது அன்றாட உணவு பழக்கத்தில் ரசித்து ருசிக்கிறான். விலங்குகளின் பால் நாம் அனைவரும் அறிந்ததே மாட்டுப்பால், ஆட்டுப்பால், ஒட்டகப்பால் வரிசையில் கழுதைப்பால் வரை பருகுகிறான்.
விதைகளை அரைத்து அதில் இருந்து பாலெடுப்பது என்று வகைப்படுத்தினால், தேங்காய் பால், பாதாம் பால், நிலக்கடலை பால், கொள்ளுப்பால், பருத்திப் பால்…என பட்டியல் உண்டு. பருத்திப்பாலுக்கு பெயர் போன மதுரையில் எங்கெங்கு காணினும் பருத்திப் பால் கடைகள் தான். இதன் சுவையும், பயனும் அறிந்து தமிழகமெங்கும் பரவியது நல்ல விஷயம் தான்.
பருத்தி விதைகளில் கோலின், விட்டமின்கள், புரதம் மற்றும் கொழுப்புகள் உள்ளது. இதனை triple nutrients என்று கூட அழைக்கலாம். உடலுக்கு ஊட்டமும், வலுவும் தருவதால் பருத்திப் பாலை வாரம் ஒரு முறையாவது இரவு உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

பருத்திப்பால் பயன்கள்:
*நிறைய நார்ச்சத்து இருப்பதால் இது ஒரு சிறந்த மலமிளக்கி.
*பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறந்த உணவு. இழந்த உடற்திறனை மீட்டுத்தரும் வேளையில் பால் சுரக்க உதவும்.
*மாட்டுப்பால் அலர்ஜி உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மாற்று.
*வெறும் வயிற்றில் குடித்தால் அல்சர் மற்றும் உணவுப் பாதையில் உள்ள புண்களை ஆற்றும்.
*வேகன் (vegans) டயட்டில் இருப்பவர்களுக்கு நல்லதொரு உணவு.
*இரத்த அழுத்தத்தை சீர்படுத்தி இதயத்திற்கு நன்மை அளிக்கிறது.
*நெஞ்சு சளியை விரட்டும்.ஆகவே மழை, குளிர்க்காலங்களில் அடிக்கடி பருகலாம்.
*மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்.
*பருத்திப்பால் உடன் கோதுமையை வறுத்து அரைத்தெடுத்து கோதுமையை பருத்தி பாலுடன் கலந்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் கை கால் மூட்டு வலி முதுகு வலி தீரும்.