உடலை வலுவாக்கும் முருங்கைக் கீரையின் அற்புத நன்மைகள்.! - Seithipunal
Seithipunal


கிராமங்களில் பொதுவாக எளிதாக கிடைப்பது முருங்கை கீரை. இந்த முருங்கைக் கீரை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைத்திருக்கலாம்.

அதன்படி முருங்கைக் கீரையை பொரியல், கூட்டு, சாம்பார் மற்றும் தேநீர் என எப்படி சாப்பிட்டாலும் உடலுக்கு பலவித நன்மைகளை கொடுக்கிறது. அதிலும் முருங்கை மரத்தில் உள்ள இலை, காய், பூ என அனைத்து பாகங்களுமே மருத்துவ நன்மைகள் கொண்டது.

முருங்கைக் கீரை சாப்பிடுவதால் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும் மனதில் ஏற்படும் பதற்றத்தையும் குறைக்க உதவுகிறது.

சர்க்கரை நோயாளிகள் முருங்கை கீரை சாப்பிடுவதால் ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

குறிப்பாக சோயாவை போலவே முருங்கைக் கீரையும் புரதச்சத்து அதிக அளவில் உள்ளது. எனவே புரதச்சத்து குறைபாடு உள்ளவர்கள் முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடலாம்.

பலவித நன்மைகள் கொண்ட இந்த முருங்கைக் கீரையில் மனிதர்களுக்கு தேவையான 20 அமினோ அமிலங்களில், 18 அமினோ அமிலங்கள் உள்ளது.

ஆண்களுக்கு ஏற்படும் நரம்பு தளர்ச்சியை குறைபாட்டை சரி செய்ய முருங்கைக்கீரை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் சரியாகும் என கூறப்படுகிறது. அதேபோல் உடலை வலுவாகவும் வைத்திருக்க உதவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits of murungai keerai


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->