உடல் வலியை போக்கும் முடக்கத்தான் கீரையில் அற்புத பயன்கள்.!
Benefits of mudakkathan keerai
முடக்கத்தான் கொடியின் வேர் இலை விதை என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது. முடக்கத்தான் கீரை ஒரு சிறந்த மருத்துவ கீரையாகும்.
இந்தக் கீரை இடுப்பு பிடிப்பு இடுப்பு வலி கை கால் வலி போன்றவற்றிற்கு முக்கிய மருந்தாக பயன்படுகிறது. மேலும் இந்தக் கீரையை வதக்கி பிழிந்து இரண்டு அல்லது மூன்று துளிகள் காதில் விட்டால் காது வலி குணமாகும்.
முடக்கத்தான் கீரையை எடுத்து கர்ப்பமாக உள்ள பெண்ணின் அடிவயிற்றில் கட்டுவதாலும் இலையின் சாற்றை பூசுவதினாலும் சுகப்பிரசவம் ஆகும் என கூறப்படுகிறது.
மேலும் குழந்தை பெற்ற பெண்களுக்கு முடக்கத்தான் கீரையை நன்றாக அரைத்து குழந்தை பெற்ற அடி வயிற்றில் பூசி வந்தால் கருப்பையில் உள்ள நச்சுக்கள் வெளியேறும் என கூறப்படுகிறது.
முடக்கத்தான் கீரையை துவரம் பருப்பு பாசிப்பருப்புகளுடன் சேர்த்து கூட்டு அல்லது கீரையை சாறு எடுத்து சூப்பராக சாப்பிட்டு வந்தால் வாத வலிகள் குணமாகும்.
முடக்கத்தான் கீரையை நன்றாக கசக்கி வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி ஜலதோஷம் குணமாகும்.
English Summary
Benefits of mudakkathan keerai