எல்லா இடங்களிலும் தளிர்த்து, செழித்து வளரும் இயல்புடையது. தமிழக மலைத்தொடர்களிலும் அதிக அளவில் வளர்கிறது. இலைகள், காய், கனி, மலர்கள் மற்றும் மரப்பட்டைகள் மனிதர்களுக்குப் பயன்கள் தருபவையாக அமைகின்றன.
நறுமணத்தை முகர்ந்தாலே, மனதிற்கு அமைதியையும் உற்சாகத்தையும் வழங்கக்கூடிய மகிழ மலர்கள், உடல் வலிமைக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. உடலை குளிர்வித்து, உடல் நச்சுக்களைப் போக்கும் வல்லமை மிக்கது, மகிழ மரம்.

பல் வியாதிகள் தீர்வில் மகிழ மர இலைகள் :
கருவேலம் தூளில் தினமும் பல் துலக்கி, அதன் பின்னர், மகிழ மரத்தின் இலைகளைக் காய்ச்சிய நீரில், வாய்க் கொப்புளித்து வர, பல் தொடர்பான வியாதிகள் மற்றும் ஈறு பாதிப்புகள் அகலும். மகிழம் காயை வாயில் இட்டு மென்று துப்ப, பல் ஆட்டம் நீங்கும்.
மகிழ மலர் எண்ணைய் :
மகிழ மலர்களில் இருந்து, வாசனை எண்ணை மற்றும், வாசனைப்பொடி தயார் செய்யப்படுகின்றன. மகிழ எண்ணையுடன் சந்தன எண்ணையைக் கலந்து, உயர் மதிப்பு மிக்க, வாசனை திரவியங்கள் தயாரிக்கிறார்கள். இவை மலர் மருத்துவத்தில், மன நல பாதிப்புகளை சரி செய்யும் அற்புத மருந்துகளாக பயன்படுகின்றன.

மகிழ மலர்களில் இருந்து தயாரிக்கப்படும் வாசனை எண்ணை, நறுமணமிக்க ஊதுவத்திகளில், சாம்பிராணி போன்ற வாசனைப் பொடிகளில் சேர்க்கப்படுகின்றன. மகிழ மலர்ப்பொடி, தலைவலி போன்ற பாதிப்புகளைப் போக்க, மூக்கின் வழியே உள்ளிழுக்கும் மருத்துவ மூக்குப்பொடியாக, பயன் தருகிறது.
உடல் வலிமைக்கு :
மகிழ மலர்களின் மனதை மயக்கும் நறுமணம், திருமணமான தம்பதியரின் அன்னியோன்யத்தை அதிகரிக்கும் தன்மைமிக்கது. மகிழ மலர்களை பாலில் இட்டு காய்ச்சி, பனை வெல்லம் சேர்த்துப்ப் பருகி வர, உடல் வலிமையாகும்.
வயிற்றுப் போக்கு :
மகிழ மரப் பழங்களைச் சாப்பிட, வயிற்றுப்போக்கு, கட்டுப்படும். மகிழ மர விதைகளை அரைத்து, வெண்ணையில் கலந்து சாப்பிட, உடல் சூடு குறையும்.
ஆண்மை மற்றும் கருப்பை பிரச்சனை :
ஆண்மைத்தன்மை அதிகரிக்கும். மகிழ மரத்தின் பட்டைகள், உடலை வலுவாக்கும், பெண்களின் மாதாந்திர பாதிப்புகளை சரியாக்கும்.
தூக்கமின்மை :

மகிழ மரத்தின் அடியில் கயிற்றுக் கட்டிலில் படுத்து வர, மனதுக்கு இதமளிக்கும் குளுமையான சூழலில், ஆழ்ந்த உறக்கம் வரும். உடல் அசதிகள் மற்றும் உடல் சோர்வு நீங்கி, மனம் புத்துணர்வாகும், மேலும், மகிழ மரத்தின் காற்று, உடலின் இயக்கத்தை சீராக்கும் தன்மைமிக்கது. இரவில் தூக்கம் வராதவர்கள், கீழ்க்கண்ட முறையைப் பின்பற்ற, நல்ல உறக்கம் வரும்.
மகிழம்பூ தே நீர் :
சிறிது மகிழம் பூக்கள் அத்துடன் சிறிது கொத்தமல்லி சேர்த்து, நீரில் இட்டு காய்ச்சி, வடிகட்டி, அந்த நீரை, தினமும் இரவு உறங்கும் வேளையில் பருகி வர, நிம்மதியான ஆழ்ந்த உறக்கம், உண்டாகும்.