நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லிக்காயின் மருத்துவ நன்மைகள்.!
Benefits of gooseberry
ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் நெல்லிக்காயில் அதிக அளவில் சத்துக்கள் நிறைந்துள்ளது. நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தலைமுடி நன்றாக இருக்கும் என்றும் குழந்தைகளுக்கு நெல்லிக்காய் ஜூஸ் கொடுப்பதால் அவர்கள் ஆரோக்கியமாக வளருவார்கள் என்றும் கூறப்படுகிறது.
அதன்படி நெல்லிக்காய் மற்றும் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து இந்தப் பதிவில் நாம் காணலாம்.
நெல்லிக்காயுடன், இஞ்சி, புதினா, கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை சேர்த்து அரைத்து ஜூஸாக செய்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடிக்கலாம்.
நெல்லிக்காய் ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக உள்ளது. மேலும் நெல்லிக்காயில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது.
தோல் மற்றும் தலை முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது நல்ல பலன் தரும் என கூறப்படுகிறது.
நெல்லிக்காயை தண்ணீரில் ஊறவைத்து காலையில் குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். எனவே நெல்லிக்காய் தண்ணீரை தினமும் குடிக்கலாம்.
நெல்லிக்காய் தண்ணீர் குடிப்பதால் தோல் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. நெல்லிக்காய் தண்ணீர் ஒரு நச்சு பானம் என்றாலும் கூட ரத்தத்தை சுத்திகரிக்கும் வேலையை செய்கிறது.
அதன்படி நெல்லிக்காய் தண்ணீர் குடிப்பதால் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. மேலும் முகத்தில் தோன்றும் முகப்பரு மற்றும் தழும்புகளை நீக்கி முகத்தை பொலிவுடன் தோன்ற வைக்கிறது.

நெல்லிக்காய் தினமும் சாப்பிடுவதால் முகத்தில் ஏற்படும் தழும்புகள், முகப்பரு போன்ற பிரச்சினைகளை அனைத்தையும் நீக்குகிறது. மேலும், முடி உதிர்தல், பொடுகு போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது.
எடை குறைக்க விரும்புபவர்கள் தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் வளர்ச்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த உதவுகிறது. அதன் காரணமாக உணவு செரிமானம் சிறப்பாக இருக்கும் மற்றும் அதிக கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இதன் மூலம் உடல் எடை குறைக்க உதவுகிறது.
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கண்களுக்கு மிகவும் நன்மை கொடுக்கிறது .