உடலின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் அகத்தி கீரையின் அற்புதமான நன்மைகள்.!
Benefits of arai keerai
பொதுவாக கீரை வகைகளில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு காலநிலைகளில் கிடைக்க பெறுகிறது.
அந்த வகையில் குட்டையானதும், தடித்த தண்டுகளை உடைய அரைக்கீரை உடலுக்கு பல்வேறு வகையான நன்மைகளை கொடுக்கிறது. அந்த வகையில் உடலுக்கு என்னென்ன நன்மைகளை அரை கீரை கொடுக்கிறது என்பதை இந்த பதிவில் நாம் காணலாம்.
அரைக்கீரை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.
அரைக்கீரையில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவாக உள்ளவர்களுக்கு நல்ல பலன் அளிக்கும்.
மேலும், அரைக்கீரை சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட வாயு தொல்லை குணமாகும்.

குறிப்பாக பிரசவமான பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்திற்கும், குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்கும் அரைக்கீரை நல்ல உணவாக பயன்படுகிறது.
கண் பார்வை மங்குதல் உள்ளிட்ட கண் சார்ந்த பிரச்சினைகள் அனைத்தையும் சாப்பிடுவதால் குணமாகும்.
அரைக்கீரை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களில் ஏற்படும் கற்களை கரைத்து நன்மை கொடுக்கிறது.
குறிப்பாக மஞ்சள் காமாலை பாதிப்பு உள்ளவர்கள் அரைக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் அளிக்கிறது.