ஆரியா பட நடிகைக்கு 2வது திருமணம்.! சைலண்ட்டாக கல்யாணத்தை முடித்த காதல் ஜோடி !  - Seithipunal
Seithipunal


ஊரடங்கு காலத்தில் பிரபலங்கள் பலரும் தங்களது திருமணத்தை சைலண்ட்டாக முடித்து வருகின்றனர். 

இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கிய அறிந்தும், அறியாமலும் என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை சமேஷா இவர் மனதோடு மழைக்காலம், மெர்குரி பூக்கள், பஞ்சாமிர்தம் என பல தமிழ் திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். மேலும், தெலுங்கு, தமிழ், பஞ்சாபி உள்ளிட்ட படங்களிலும் ஒரு சில இந்தி மற்றும் கன்னட படத்திலும் அவர் நடித்து இருக்கின்றார். 

தற்போது அவர் பாடகர் மற்றும் தொழில் அதிபரான ஷேல் ஒஸ்வால் என்பவரை திருமணம் செய்து கொண்டு இருக்கின்றார். இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் தான்.  சமேஷாவுக்கு ஏற்கனவே 10 வயதில் மகனும், ஷேலுக்கு 17 வயதில் ஒரு மகளும் 16 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த மூன்றாம் தேதி இவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். 

இருவரும் ஒன்றாக பணியாற்றிய போதுதான் அறிமுகம் ஆனதாக தெரிவித்துள்ளனர். பின்னர், நட்பாக ஆரம்பித்த இவர்களுடைய பழக்கம் காதலாக மாறியுள்ளது. இருவரின் குழந்தைகளும் இந்த திருமணத்தில் மிக்க மகிழ்ச்சியாக இருப்பதை புகைப்படங்களில் காணமுடிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ariya movie heroine got married 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->