சேற்றுப் புண்ணை தடுக்கும் முறைகள் தெரியாமல் இருக்கிறீர்களா...? - Seithipunal
Seithipunal


சேற்றுப்புண் வராமல் தடுக்கும் முறைகள் :
ஒழுங்கற்ற தரைத் தளங்களில் காலணி இல்லாமல் நடப்பதைத் தவிர்க்க வேண்டும். தரமற்ற காலணிகளை அணியக்கூடாது. 
தொற்றுநோய்கள் தாக்காமல் இருக்கவும், உடலின் எதிர்ப்புச் சக்தி குறையாமல் இருக்கவும் ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

அடிக்கடி இத்தொற்று ஏற்படுபவர்கள் கால்கள் நனைந்த பின்னர் ஈரத்தை ஒற்றி உலர வைப்பது அவசியம். இங்கு ஈரத்தைத் துடைப்பதற்கு உபயோகித்த துணியை வேறு இடங்களைத் துடைக்கப் பயன்படுத்தக்கூடாது.
காலணி அணியும் போது கால்களுக்கிடையில் மருந்துகளை பவுடராக போடுவதன் மூலமும் இந்நோயை குணப்படுத்தலாம்.
இதைக் குணப்படுத்த ஒருவர் தனது கால்களை முக்கியமாகப் பாதங்களை ஈரமின்றியும் சுத்தமாகவும் வைத்திருப்பது அவசியம்.
பொதுவான மருத்துவக் குறிப்புகள் :
பாத எரிச்சலுக்கு மருதாணி இலையை அரைத்துப் பாதத்தில் போட்டு சிலமணி நேரங்களுக்குப் பின்பு வெந்நீரில் கழுவவும். 
சேற்றுப்புண் உள்ள இடத்தில் சிற்றாமணக்கு, சுண்ணாம்பு கலந்து இரவில் தடவவும். 
மருதாணி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசலாம். மஞ்சளை நீர்விட்டு அரைத்துப் பசலாம். 
சேற்றுப்புண்ணிற்கு காய்ச்சிய வேப்ப எண்ணெயைத் தடவி வர விரைவில் குணமாகும். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Are you unsure of how to prevent mud ulcers


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->