பாதாமா.? பிஸ்தாவா.? இரண்டில் எது அதீத சத்து கொண்டது.?! - Seithipunal
Seithipunal


பாதம் பருப்பை போன்று பிஸ்தா பருப்பை அனைவரும் அறிவோம். இந்த பருப்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூலமாக உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்டுவதுடன், உடலில் இருக்கும் பல விதமான நோய்களை குணப்படுத்தும் வல்லமையை கொண்டது. இந்த பிஸ்தா பருப்பில் இருக்கும் வைட்டமின் மற்றும் தாது சத்துக்கள் மூலமாக நமது உடல் நலமானது பாதுகாக்கப்படுகிறது. 

பிஸ்தா பருப்பானது இரத்தத்தை சுத்திகரிக்கும் பிரதான வேலையை செய்கிறது. இதன் மூலமாக இரத்த நாளங்களில் இருக்கும் கொழுப்புகளை கரைத்து, இரத்தத்தை சுத்தப்படுத்திக்கிறது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. செல்களுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்கி, உடலை பாதுகாப்புடன் வைத்து கொள்ள உதவுகிறது. 

இந்த பருப்பில் இருக்கும் வைட்டமின் பி6 காரணமாக, இரத்த வெள்ளையணுக்கள் உற்பத்தி அதிகரிக்கப்படுகிறது. இரத்தத்தில் இருக்கும் வெள்ளையணுக்கள் மற்றும் சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, மண்ணீரல் மற்றும் நிணநீரை பராமரிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நியாபக ஆற்றல் அதிகமாகிறது. 

சூடான பாலில் தினமும் பிஸ்தா பருப்பை ஊற வைத்து சாப்பிட்டு வர நியாபக சக்தியானது வெகுவாக ஆத்திகரிக்கும். இதன் மூலமாக தோல் சம்பந்தப்பட்ட நோய்களானது வராமல் தடுக்கப்படுகிறது. இந்த பருப்பில் இருக்கும் வைட்டமின் ஈ மூலமாக புறஊதாக்கதிர்கள் மூலமாக தோல் நோய்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் உதவுகிறது.

பிஸ்தா பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள், கண்புரை நோய்கள் போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது. மேலும், கண்ணிற்கு தெளிவான பார்வையானது உண்டாகிறது. இதய சம்பந்தப்பட்ட நோய்களின் அபாயத்தை குறைத்து, மாரைடப்பு ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. மேலும்., உடலின் கெட்ட கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்புகளின் ஆற்றலை அதிகரிக்கும் வல்லமை கொண்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

almond vs pista


கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
Seithipunal