குளிகை நேரத்தில், செய்யக் கூடாதது எது தெரியுமா?
குளிகை நேரத்தில், செய்யக் கூடாதது எது தெரியுமா?
தினசரி காலண்டர் தாளைக் கிழிக்கும் போது, அன்றைய நல்ல நேரம் என்னென்ன? என்று பார்க்கிறோம். அதே சமயம், ராகு காலம், எமகண்டம், குளிகை நேரத்தையும் நாம் கவனிக்கத் தவறுவதில்லை.
இந்தக் குளிகை என்றால் என்ன?
ராகு காலம், எம கண்டம் போல, இந்தக் குளிகை என்பதும், தினமும் ஒன்றரை மணி நேரம், நீடித்திருக்கும். இது நல்ல நேரமா? இல்லையா? என்பது தான் பலரது கேள்வியாக இருக்கும்.
சனி பகவானின் மகன் பெயர் தான் குளிகன். இவர் தான், தினமும் ஒன்றரை மணி நேரம் ஆட்சி செய்கிறார். இந்த நேரத்தில், நாம் செய்யும் காரியங்களைப் பல முறை நம் வாழ்வில் பெருகச் செய்வார் குளிகன்.
அடுத்து, இந்த நேரத்தில் நாம் செய்யக் கூடாதது-
குளிகை நேரத்தில், அசுப காரியங்கள் செய்யக் கூடாது. இறந்தவர்களின் ஈமச் சடங்குகளை செய்யக் கூடாது. வீடு மாறிச் செல்லுதல், கடன் வாங்குதல், போன்றவற்றை, கண்டிப்பாக செய்யக் கூடாது.
செய்ய வேண்டியவை-
நல்ல காரியங்கள் செய்யலாம். சுபச் செலவுகள் செய்ய வேண்டும். தரும காரியங்களைச் செய்யலாம். இந்த நேரத்தில் புதிய காரியங்கள் மற்றும் தொழிலைத் துவங்கினால், மீண்டும் புதுப் புது வாய்ப்புகள் பெருகும் என்பது ஐதீகம்.
English Summary
to know about the 'Kulihai"