பொறுமையிழந்த சசிகலா, எடுத்த அதிர்ச்சி முடிவு!  - Seithipunal
Seithipunal


வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா 4 வருட சிறை வாசத்திற்குப் பிறகு, கடந்த 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டு, கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தமிழகம் திரும்பினார்.

தமிழகம் திரும்பிய அவர் அரசியல் பணிகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தொடர்ந்து தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து அவர் 17ஆம் தேதி வரை ஓய்வில் இருப்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

அமமுக - அதிமுக இணைப்பு சாத்தியமாகும் என நினைத்திருந்த தினகரன் ஆதரவாளர்களுக்கு,முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பேச்சானது அதிர்ச்சியை கொடுத்ததுடன் நம்பிக்கையையும் இழந்து விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் தினகரனை நம்பிய சசிகலாவும் அதிருப்தியில் இருப்பதாகவே கூறப்படுகிறது. சசிகலா வந்தததும் அதிமுகவில் இருப்பவர்கள் வந்து சந்திப்பார்கள் என நம்பிய சசிகலாவிற்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது. 

அமமுக  நிர்வாகிகளுடன் கலந்துரையாடுவார், ஆலோசனை கூட்டம் நடத்துவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்தக் கூட்டங்கள் எல்லாம் எதுவும் நடைபெறாமல் அவர் ஓய்வுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில்  அடுத்த அறிவிப்பாக அவர் வருகின்ற17 ம் தேதி தஞ்சாவூர் செல்ல இருக்கிறார் என செய்திகள் வெளியாகி உள்ளது. தஞ்சாவூருக்கு சென்று உறவினர்களை சந்திக்க இருப்பதாகவும், மேலும் அவர் தொடர்ந்து ஓய்வில் இருப்பார் எனவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது.

சசிகலா 10 நாட்கள் வரை தஞ்சாவூரில் இருப்பார் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கிடையே அமமுக நிர்வாகிகள் 5 பேர் டெல்லிக்கு செல்ல இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் சசிகலா மற்றும் தினகரன் ஆதரவு வட்டாரங்களில் பரபரப்பாக காணப்படுகிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sasikala new plan to till Feb 27


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->