திமுகவின் வெற்றிக்கு ஐபேக் போட்ட ஸ்கெட்ச்.! மெல்ல கசிந்த மெசேஜால் திருமாவளவன் அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


திமுக உட்பட கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றும் எந்தெந்த தொகுதியில் போட்டிவிடலாம் எத்தனை தொகுதியில் போட்டியிடலாம் என்னும் பட்டியலை ஐபேக் நிறுவனம் வழங்கியுள்ளது. 

அதில் காங்கிரஸ் 27 இடங்களும், மதிமுக 6 இடங்களும், கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 6 இடங்களும் என மொத்தம் 12 இடங்களும், விசிக 6 இடங்களும், கொமதேக கட்சி மூன்று இடங்களும், இந்தியன் முஸ்லிம் லீக் கட்சி மூன்று இடங்களும், இந்திய ஜனநாயக கட்சி மூன்று இடங்களும், மனிதநேய மக்கள் கட்சி மூன்று இடங்களும் என திமுக கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம் 63 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

திமுக நேரடியாக போட்டிஇடும் தொகுதிகள் 171 என்று குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. காங்கிரஸ் கட்சிக்கு மொத்தமாக 27 இடங்களை ஒதுக்கியுள்ள ஐபேக் நிறுவனம் எந்தெந்த தொகுதி என்பதையும் ஒதுக்கி உள்ளது. 

அதில் மதுரவாயல், ராயபுரம், நாமக்கல், கோபிசெட்டிப்பாளையம், உதகமண்டலம், வேடசந்தூர், திருச்சி (கிழக்கு), முசிறி, காட்டுமன்னார்கோவில், நன்னிலம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகாசி, முதுகுளத்தூர், வைகுண்டம், நாங்குநேரி, விளவங்கோடு, கிள்ளியூர், அம்பத்தூர், மதுரை, விளாத்திகுளம், வால்பாறை, ராதாபுரம், மைலாப்பூர், பூந்தவல்லி மற்றும் திருமயம் ஆகிய தொகுதிகளை ஒதுக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

விசிக தலைவர் திருமாவளவன் இந்த தேர்தலில் கணிசமாக 15 க்கும் மேற்பட்ட தொகுதிகளை பெற்றுவிட வேண்டும் என திட்டமிட்டுள்ளதாகவும் குறைந்த பட்சம் 10 தொகுதியாவது வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதால். அனால், ஐ பேக் நிறுவனம் வெறும் 6 தொகுதிகளை மட்டும் வழங்க பட்டியல் வெளியிட்டு இருப்பது அவருக்கும் பெரும், அதிர்ச்சியாக உள்ளதாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prasanth kishore list makes shock to thirumavalavan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->