உதவித் தொகையுடன் தொழிற்பழகுநர் பயிற்சி - எங்குத் தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக தொழிற்பழகுநர் பயிற்சி நேரடி சேர்க்கை முகாம் 21.02.2024 அன்று காலை 9 மணி முதல் மாலை 4.00 மணி வரையில் செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் சென்னை மண்டலத்திற்குட்பட்ட அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் துறை சார்ந்த முன்னணி தொழில் நிறுவனங்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இந்த முகாமில், NCVT மற்றும் SCVT முறையில் அரசு மற்றும் தனியார் ஐடிஐயில் தேர்ச்சி பெற்ற இறுதி ஆண்டு தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கும் பயிற்சியாளர்கள், திறன் பயிற்சி மையங்களில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள், MES பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள், 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிப்ளோமா மற்றும் பட்டபடிப்புக் கல்வித் தகுதியுடைய மாணவ மற்றும் மாணவியர்களுக்கு நேரடியாக தொழிற்பழகுநர்களாக அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை தொழிற்பழகுநர் பயிற்சி பெற்று அசல் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.8000 முதல் ரூ.16,000 வரை அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை சார்ந்த முன்னணி தொழில் நிறுவனங்களில் வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக NAC சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புக்கு முன்னுரிமையும், வயது வரம்பில் சலுகையும் உள்ளது. ஆகவே, இந்த முகாமில் பங்கேற்கும் பயிற்சியாளர்கள் கல்வி சான்றிதழ் அசல் மற்றும் நகல்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vocational training admission camp in chengalpat


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->