குரூப்-4 பணியிடம் நிரப்புவதற்கான கலந்தாய்வு எப்போது?  - Seithipunal
Seithipunal


குரூப்-4 பணியிடம் நிரப்புவதற்கான கலந்தாய்வு எப்போது? 

தமிழகத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கான குரூப்-4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. முதலில் 7 ஆயிரத்து 301 காலி பணியிடங்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் அது 10 ஆயிரத்து 178ஆக உயர்த்தப்பட்டது. இந்தத் தேர்வில் 18 லட்சம் பேர் பங்கேற்ற நிலையில், அதற்கான முடிவு, கடந்த மார்ச் 24ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூலை 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி ஒதுக்கீடு செய்வதற்கான கலந்தாய்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "முதல் கட்டமாக கிராம நிர்வாக அலுவலர் , இளநிலை உதவியாளர், வரி தண்டலர், நில அளவையாளர், பண்டக காப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலகத்தில் நடைபெறுகிறது. 

தேர்வர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி மற்றும் விபரங்கள் அவர்களுக்கு தனிப்பட்ட மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

தேர்வர்கள் ஏற்கனவே அனுப்பி வைத்த சான்றிதழ்களின் உண்மை தன்மையின் அடிப்படையில் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, பணி ஒதுக்கீடு செய்யப்படும். தேர்வர்களின் சான்றிதழ் சரிபார்ப்பில் திருப்தி இல்லை என்றால், அவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC group 4 exam counselling date released


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->