டிஎன்பிஎஸ்சி குரூப்–2 முதல்நிலைத் தேர்வு நாளை நடக்கிறது!
TNPSC Group 2 preliminary exam will be held tomorrow
தமிழ்நாடு அரசுத் துறைகளில் மொத்தம் 615 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக, டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூலை 15ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
இதில்,குரூப்–2 பதவிகள்: உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை–2, தனிப்பிரிவு உதவியாளர், உதவி பிரிவு அலுவலர், வனவர் உள்ளிட்ட 50 இடங்கள்
குரூப்–2A (Non-Interview) பதவிகள்: முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவியாளர் நிலை–3, மேற்பார்வையாளர், செயல் அலுவலர் நிலை–3, கீழ்நிலை செயலிட எழுத்தர் உள்ளிட்ட 595 இடங்கள் உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்காக மொத்தம் 5,53,634 பேர் விண்ணப்பித்துள்ளனர்.இதில் ஆண்கள் – 2,12,195 பேர்பெண்கள் – 3,41,114 பேர்
திருநங்கைகள் – 25 பேர்.
இவர்களுக்கான ஹால்டிக்கெட் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதுடன், முதல்நிலைத் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் 1,905 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. சென்னை மட்டும் 188 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது; இதில் 53,065 பேர் எழுதவுள்ளனர்.
தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்தைச் சென்றடைய வேண்டும். 9 மணிக்குப் பிறகு வரும் தேர்வர்களுக்கு தேர்வறைக்குள் நுழைய அனுமதி இல்லை என டிஎன்பிஎஸ்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக முதன்மைத் தேர்வை எழுதுவதற்கான தகுதி பெறுவார்கள்.
English Summary
TNPSC Group 2 preliminary exam will be held tomorrow