முன்கூட்டியே வெளியாகும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்... வெளியான தகவல்!
Tamilnadu public exam SSLC result
தமிழகத்தில் பிளஸ்–2 பொதுத் தேர்வின் முடிவுகள் மே 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதைவிட ஒரு நாள் முன்னதாகவே மே 8-ம் தேதி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, பத்தாம் வகுப்பு தேர்வுத் முடிவும் அசையா அட்டவணையைவிட முன்னதாக வெளிவரும் என கல்வித்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு, சுமார் 8.75 லட்சம் மாணவ–மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு அட்டவணை வெளியானபோது, முடிவுகள் மே 19-ம் தேதி (திங்கள் கிழமை) வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
ஆனால் தற்போது, அந்த முடிவும் முன்கூட்டியே வெளிவரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
முடிவுகளை முன்கூட்டியே வெளியிட அரசு முடிவு செய்திருந்தால், அதற்கான அறிவிப்பு இன்றோ அல்லது நாளையோ வெளியாகலாம். இல்லையெனில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியே (மே 19) முடிவுகள் வெளியாகும்.
English Summary
Tamilnadu public exam SSLC result