இந்தாண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு மூன்று சீருடைகள் - அமைச்சர் செங்கோட்டையன்! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் கொங்கர்பாளையம் கொழிஞ்சிக்காடு கிராமத்தில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் கொங்கர்பாளையம் பகுதிகளில் அதிமுக கட்சி அலுவலகத்தை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது:-

அரக்கன்கோட்டை பகுதியில் மேலும் ஒரு மேல்நிலைப்பள்ளி திறக்கப்படும். வருகிற டிசம்பர் மாத இறுதிக்குள் பள்ளிக்குழந்தைகளுக்கு  ‘ஷூ’ வழங்கப்படும். அரசு பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு ஏற்கனவே ஒரு சீருடை வழங்கப்பட்டு வந்த நிலையில் கூடிய விரைவில் கூடுதலாக 3 சீருடைகள் வழங்கப்படும் என்றார்.

மேலும், இந்த பகுதியில் பட்டப் படிப்பு படித்த 3 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்கள் மூலமாக  வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sengottaiyan says three dress for government school students


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->