பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தமிழ் மொழி திறனை மேம்படுத்தும் விதமாக அக்டோபர் 1ஆம் தேதி திறனறி தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு மாதம் தோறும் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இதற்கு நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளி மற்றும் அனைத்து வகை பள்ளியிலும் பயிலும் 11-ம் வகுப்பு மாணவர்கள் இந்த தேர்வினை எழுத செப்டம்பர் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் விருப்பமுள்ள மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இன்றே கடைசி நாள் என்பதால் மாணவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School students scholarship last day for apply today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->