கோவை || நியாய விலைக் கடைகளில் 233 காலி பணியிடங்கள்! நேரடி நியமன முறையில் ஆள் சேர்ப்பு! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளில் 233 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியை தேர்வு இல்லாமல் நேரடி நியமனம் முறையில் ஆள் சேர்ப்பு நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை கோவை மண்டல கூட்டுறவு சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. 

கோவை மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கூட்டுறவு நிறுவனங்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில் உள்ள 233 விற்பனையாளர்கள் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் வரும் நவம்பர் 14ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் 10 மயிரும் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கான குறைந்தபட்ச கல்வி தகுதி, வயதுவரம்பு, இட ஒதுக்கீடு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பித்தல் தொடர்பான விவரங்கள் மாவட்ட ஆள் சேர்ப்பு இணையதளமான http://www.drbcbe.in வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு kovaidccb@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவும் உதவி மைய தொலைபேசி எண் 0422 2302447 என்ற எண்ணிலும் கோவை மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Recruitment through direct appointment in kovai ration shop


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->