பொதுத்துறை நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை; பயிற்சியின் போதே சம்பளம்.. விண்ணப்பித்து விட்டீர்களா? - Seithipunal
Seithipunal


பொதுத்துறை நிறுவனமான பொக்கோரா இரும்பு ஆலையில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 15-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Attendent-Cum Technician Trainee (NAC)
காலியிடங்கள்: 146
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், இரும்பு ஆலையில் டிரேடு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

இதற்கு தேர்வு செய்யப்படுவோருக்கு, இரண்டு ஆண்டுகள் பயிற்சி வழங்கப்படும். மேலும், பயிற்சியின் போது முதலாம் ஆண்டு மாதம் ரூ.12,900 தொகையும், இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.16,100 தொகையும் வழங்கப்படும்.

இதற்கு தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, துறைவாரியான தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர்,  www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PSU notification released in technician job


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->