போலீஸ் எஸ்.ஐ. தேர்வு: நாகர்கோவிலில் 16ஆம் தேதி இலவச மாடல் தேர்வு...! - முன்பதிவு அவசியம்!
Police SI Exam Free model exam 16th Nagercoil Reservations required
குமரி மாவட்ட கலெக்டர் அல.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது வருமாறு:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (தாலுகா) பிரிவில் 933 காலியிடங்களும், ஆயுதப்படை பிரிவில் 366 காலியிடங்களும் என மொத்தம் 1,299 பணியிடங்களுக்கு நேரடி நியமன தேர்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வுக்கான தயாரிப்பை எளிதாக்கும் வகையில், நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 16ஆம் தேதி இலவச மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது.
மாதிரி தேர்வில் பங்கேற்க விரும்பும் நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், விண்ணப்பப் படிவ நகல், நுழைவுச்சீட்டு, ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் தேர்வு நாளன்று காலை 9.30 மணிக்குள் மையத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் டெலிகிராம் சேனலில் பகிரப்பட்டுள்ள கூகுள் படிவம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம் எனவும், முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும் எனவும் கலெக்டர் தெரிவித்தார்.
English Summary
Police SI Exam Free model exam 16th Nagercoil Reservations required