முதலாமாண்டு மாணவர்களுக்கு ஜூலை 3ஆம் தேதி கல்லூரி தொடக்கம் - உயர்கல்வித்துறை அறிவிப்பு - Seithipunal
Seithipunal


ஜூலை 3ம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி தொடங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இதில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 22-ம் தேதியுடன் நிறைவுபெற்றது. இந்நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இதுவரை 75,811 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்றும், முதலாமாண்டு மாணவர்களுக்கு ஜூலை 3ம் தேதி கல்லூரி தொடங்கப்படும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலைக் கல்லூரிகளில் மொத்தம் 1,07,299 மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 75811 மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீதமுள்ள இடங்களுக்கு இன சுழற்சி முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

ஜுன் 30, 2023 வரை முதலாமாண்டு மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும். முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி 2023 ஜூலை 3 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று உயர்க்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Higher Education Notification On the 3rd of July College start for First Year Students


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->