இந்த படிப்பை படித்து முடித்தால் நேராக அரசு வேலை தான்.. புதிய படிப்புகளை அறிமுகம் செய்யும் கல்வித்துறை.! - Seithipunal
Seithipunal


எவ்வளவுதான் கஷ்டப்பட்டு கடன் வாங்கி படித்தாலும் கூட படித்தவர்களுக்கு வேலை கிடைக்கிறதா என்றால் கேள்விக்குறியாக தான் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் இந்த படிப்பை முடித்தாலே அரசு வேலை கிடைக்கும் என்று தற்போது ஒரு செய்தி வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 

அடுத்த 10 வருடங்களில் இந்திய அளவில் 3 லட்சம் ஊரமைப்பு வடிவமைப்பாளர்கள் தேவைப்படுவார்கள் எனவும், அதற்குத்தக்கவாறு 8000 பேரை உருவாக்குகின்ற வகையில் புதிய படிப்புகளை துவங்க வேண்டும் என உயர்கல்வி நிறுவனங்களுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்தது.

அதில் இளநிலை திட்டமிடல் பட்டம்(B.plan) 6000 மாணவர்களுக்கும், மற்றும் முதுகலை திட்டமிடல் பட்டம் (M.plan) 2000 மாணவர்களுக்கும் கிடைக்கும் படி படிப்பை உருவாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலை திட்டமிடல் பள்ளியில் இந்த படிப்புகள் இந்த ஆண்டே துவங்கப்படுகின்றன.

இளங்கலை பட்டப்படிப்பில் 75 பேருக்கு வாய்ப்பும், முதுகலை பட்டப்படிப்பில் 60 பேருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் மற்றும் நகர்புற ஊரமைப்பு திட்ட இயக்ககம் முதற்கட்டமாக 10 கோடியை வழங்கவுள்ளது. 

அத்துடன் 5 ஆண்டுகளுக்கு தமிழக அரசு சார்பில் 18 கோடியே 54 லட்சம் கொடுக்கப்படுகிறது. இது அவசர தேவை என்பதால் இந்த படிப்பு தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறுகின்றனர். மேலும் சிவில் இன்ஜினியரிங் பொறியியல் படிப்புகளை முடித்தவர்களுக்கு இது கூடுதலாக பயன்படக்கூடும் என்று கல்வி ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Getting Govt Job after Completing Degree


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->