சென்னையில் இலவச ஐஏஎஸ் பயிற்சி: 525 பேர் தேர்வு - உடனே விண்ணப்பிக்க தமிழக அரசு அறிவிப்பு!
Free IAS Coaching in Chennai 525 Candidates Selected for 2027 UPSC Exam
யூபிஎஸ்சி (UPSC) தேர்வுக்குத் தயாராகும் தமிழக இளைஞர்களுக்குத் தமிழக அரசு ஒரு சூப்பர் குட் நியூஸ் அறிவித்துள்ளது. தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையம் (AICSCC) மற்றும் TNSkills இணைந்து, 2027-ஆம் ஆண்டுக்கான யூபிஎஸ்சி தேர்வுக்கு இலவசப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இதற்காக நடத்தப்பட்ட மதிப்பீட்டுத் தேர்வின் அடிப்படையில் தகுதி பெற்ற 525 பேரின் பட்டியல் http://civilservicecoaching.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் விவரப் பகிர்வு பின்வருமாறு:
சென்னை (முழு நேரம்): 225 பேர் , சென்னை (பகுதி நேரம்): 100 பேர், மதுரை (முழு நேரம்): 100 பேர், கோவை (முழு நேரம்): 100 பேர்
அடுத்த கட்ட முக்கிய தேதிகள்:
தேர்வானவர்கள் வரும் அக்டோபர் 14 முதல் 20-ஆம் தேதிக்குள் மேற்கண்ட இணையதளத்தில் தங்கள் விண்ணப்பத்தை உறுதி செய்ய வேண்டும்.
இறுதிக் பட்டியல் அக்டோபர் 22-ஆம் தேதி வெளியாகிறது.
அக்டோபர் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள "காஞ்சி" வளாகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
இவர்களுக்கான வகுப்புகள் அக்டோபர் 28-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகின்றன.
ஏற்கனவே இப்பயிற்சியைப் பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 044-24621475 என்ற எண்ணிலேயோ அல்லது 93457 66957 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
English Summary
Free IAS Coaching in Chennai 525 Candidates Selected for 2027 UPSC Exam