இளைஞர்களே ரெடியா.! மதுராந்தகத்தில் 8-ந்தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வருகின்ற 8-ந்தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வரும் 8-ஆம் தேதி மதுராந்தத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. 

இந்த முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு நேர்முகத் தேர்வு நடத்தி பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளார்கள். 

கல்வி தகுதி:

• 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ.

• மேலும் செவிலியர்கள், மருந்தாளுனர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். 

வயது வரம்பு: 18 முதல் 40 வரை

• வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்பவர்கள் கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் கலந்து கொள்ளவும்.

நடைபெறும் இடம்:

காலை 10 மணி முதல் 2 மணி வரை மதுராந்தகம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஆர்.ஏ.ஆர்.திருமண மண்டபத்தித்தில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் நேரில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dec 8th private employment camp at Maduranthakam Chengalpattu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
Seithipunal
-->