எங்களால் தேர்வு எழுத முடிவில்லை 40% அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் புகார்.! - Seithipunal
Seithipunal


அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளாக 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. அவற்றில் இறுதியாண்டு பயிலக்கூடிய மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் 24ம் தேதி முதல் ஆன்லைனில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

அதற்கு முன் கூட்டியே மாணவர்களை தயார் செய்யக்கூடிய வகையிலே இரண்டு நாட்கள் மாதிரித்தேர்வு ஆன்லைனிலேயே நடத்தப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

அதன்படி இன்றைய தினம் அந்த முதலாவது மாதிரி தேர்வு இன்று நடைபெற்றது. அப்போது தொழில்நுட்ப கோளாறால் அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் மாதிரி தேர்வை கணிசமான மாணவர்கள் எழுத முடியாமல் அவதி என புகார் எழுந்துள்ளது. 

தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் சுமார் 40 சதவீத மாணவர்கள் ஆன்லைன் மாதிரி தேர்வை எழுத முடியவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anna university students complaint about online test


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->