ஹாப்பி நியூஸ்.. "நீதிபதிகள்" பணிக்கான வயதுவரம்பு தளர்வு..!! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


கடந்த மார்ச் 8ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் சிவில் நீதிபதி பதவிகளில் 19 காலி பணியிடங்கள் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இந்த அறிவிப்பானது புதுச்சேரியில் உள்ள சிவில் மற்றும் மாவட்ட நீதிபதி பணியிடங்களும் அடங்கும். அந்த அறிவிப்பின்படி பொது பிரிவினருக்கு 25 முதல் 35 வரையும், எஸ்சி எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 25 முதல் 40 வரையும் வயது நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் நடப்பு கல்வி ஆண்டில் சட்டப் படிப்பு முடித்தவர்களாக இருந்தால் 22 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

இந்த பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு ஜூன் 3ம் தேதியும், முதன்மை தேர்வு ஆகஸ்ட் 5 மற்றும் 6ம் தேதியும், இறுதி நேர்காணல் அக்டோபர் 9ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் ஏப்ரல் 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த பணியிடங்கள் புதுச்சேரி நீதித்துறை பணிகளுக்கும் பொருந்தும் என்பதால் அதற்கான அரசாணை கடந்த மார்ச் 31ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. அந்த அரசாணையில் குறிப்பிட்டிருந்த வயது வரம்பை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசின் சார்பாக செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த செய்தி குறிப்பில் "புதுச்சேரி அரசால் 31 3 2023ல் வெளியிடப்பட்ட அரசாணை எண்: 11/LD-2023ஐ கருத்தில் கொண்டு புதுச்சேரி நீதித்துறை பணிக்கான சிவில் நீதிபதி மற்றும் மாவட்ட நீதிபதி பதவிகளுக்கு ஒருமுறை நடவடிக்கையாக அதிகபட்ச வயது வரம்பு இரண்டு ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட பணியிடங்களுக்கு இணையதள வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி 15.4.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது மற்றும் வங்கி மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 17.4.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. விவரங்களுக்கு https://www.mhc.tn.gov.in  என்ற இணையதளத்தை பார்க்கவும்" என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Age limit increased for Puducherry Judge Posts


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->