11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு முடிவுகள் வெளியீடு... முதலிடம் பிடித்த மாவட்டம்.!!
11th exam result release
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021 - 2022 ஆம் கல்வியாண்டுக்கான 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றுள்ளது. மொத்தம் 8 லட்சத்து 83 ஆயிரத்து 882 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 4 லட்சத்து 33 ஆயிரத்து 684 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 50 ஆயிரத்து 192 பேரும் தேர்வு எழுதினர்.
இந்நிலையில், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு முடிவுகள் சற்று முன்பு வெளியிடப்பட்டது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த இணையதளங்களில் மாணவ - மாணவிகள் தங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

11ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 94.99% மாணவிகள் மற்றும் 84.86% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 41,376 மாணவர்கள் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மாநில அளவில் 95.56% தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 95.44% தேர்ச்சி பெற்று விருதுநகர் 2வது இடம், 95.25% தேர்ச்சி பெற்று மதுரை மாவட்டம் 3வது இடம் பிடித்துள்ளது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.