தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!!
11 districts school leave
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தின் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தாமதமாக இன்று உருவாகலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், அதன்படி, தூத்துக்குடி, திருவள்ளூர், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, திண்டுக்கல், தேனி, கடலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
11 districts school leave