தமிழ் இனி மெல்ல சாகும் என்றார்கள்., ஆனால், இவ்வளவு விரைவிலா!! மனதை உருக்கும் தமிழின் அழிவு!!
tamil will destroy
உலகில் மிகவும் தொன்மையான மொழி என்றால் அது தமிழ் தான்! ஆனால், தற்சமயம், நமது தமிழ் மொழியின் நிலையை பார்த்தல் மிகவும் கவலை தான் வருகின்றது. தமிழின் சிறப்பு தொன்மையில் மட்டுமல்ல. இனி அது தொடர்ந்து இருப்பதிலும் தான்.
.jpg)
தற்பொழுது தமிழை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் நம்மை போன்ற இளைஞர்களுக்கு நிச்சயம் உள்ளது. தமிழின் பெருமையை மறந்து ஆங்கிலத்தின் மோகம் கொண்டது தான் தமிழின் இந்த நிலைக்கு காரணம். நம்மிடம் தற்பொழுது பேசும் ஐந்து வார்த்தையில் மூன்று வார்த்தை ஆங்கிலம் தான், ஆங்கிலத்தமிழ் தான் நமது நுனி நாக்கில் மிஞ்சியுள்ளது.

தமிழரிடம் தமிழில் பேசுங்கள் என பிரச்சாரம் செய்யக்கூடிய அவலம் நமது செந்தமிழுக்கு வந்தது ஒரு வெட்கக்கேடான விஷயம். நாவில் பேசுகையிலேயே நெஞ்சை உருகவைக்கும் தமிழ் மொழி நம் தலைமுறையோடு அழிந்து விடுமோ என்ற பயம் மனதில் குடி கொண்டுள்ளது. கவிஞர் ஒருவர், "பசுமாடும் தாயை அம்மாவென சொல்கிறது, பச்சைத்தமிழனோ மம்மினு சொல்கிறான்!" என்று கூறினார்.
இப்படி பட்ட வார்த்தைகள் அவரது வாயில் வரவேண்டுமெனில் அவரது மனக்குமுறல்கள் எப்படி இருந்திருக்கும் என புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு சிறுபிள்ளை பள்ளிக்கு செல்கையில் சொல்லிக் கொடுக்கப்படும் முதல் வார்த்தையே தமிழாக இருப்பதில்லை. நம்மை அடிமையாகிய ஆங்கிலேயரின் மொழியை பேசுவது தான் இன்று தமிழனுக்கு உயர்வாக தெரிகிறதா?

ஆங்கிலம் என்பது ஒரு மொழி அதை அறிவு திறமையாக யாரும் பார்க்க வேண்டாம். சற்று யோசித்து பாருங்கள் நமாமி சுற்றியுள்ள பல பொருட்களுக்கு தமிழில் அர்த்தம் கேட்டால் இதுவரை நாம் கேள்விப்படாத பெயராக ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது. இது எவ்வளவு பெரிய இழுக்கு தெரியுமா? நமது மனதில் உள்ள சிந்தனைகள் கூட தூய தமிழில் ஒருபோதும் இருப்பதில்லை.

மொழிதான் இப்படி போகின்றது, நமது கலாச்சாரத்தின் நிலை என்னவென்று பார்த்தால், அதன் மோசமான நிலையை வார்த்தையில் கூறி புரியவைக்க முடியவில்லை. முன்பெல்லாம் சினிமா என்னும் ஊடகம் நாடகத்தமிழ் வடிவில் தமிழ் கலாச்சாரத்தை வளர்க்க மட்டுமே உதவியது.ஆனால், தற்பொழுது நிலை நுனி நாக்கில் ஆங்கிலம், சாயம் பூசப்பட்ட தலைமுடி அறிமுக காட்சியிலேயே கையில் பாட்டில், புகை என ஐந்து நிமிடத்தில் நூறு பேரை சாகடிக்கும் ஒருவந்தான் நாயகனாம்.

அரை நிர்வாண உடையில் நாயகியும் முழுதாக போர்த்திய உடையில் நாயகனும் இமயமலையின் உறைய வைக்கும் பனி மலைச்சாரலில் இடி இசையில் நடனம். தற்போதுள்ள தமிழ் கலாச்சாரத்தில் பெண்கள் ஒரு கேலிப்பொருள்களாகவே சித்தரிக்கப்படுகின்றனர். இதனை தமிழ் சினிமா இன்றும் ஆதாரப்பூர்வமாக நிருபித்துக்கொண்டு தான் இருக்கிறது. அவலங்கள் இத்துடன் முடியவில்லை.

தமிழின் பண்டைய வரலாற்றையும் சண்டைக்கு இழுக்கிறது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஒன்று பிரம்மாண்ட செலவில் தமிழில் வெளிவந்த சிவாஜி படத்தில் ' தமிழ் வேந்தன் கொடை வள்ளல் பாரி மன்னனின் புதல்விகள் அங்கவை, சங்கவை என்பவர்களை கதாப்பாத்திரங்களின் பெயர்களாக வைத்து அவர்களின் தந்தையாக ஒரு நாடறிந்த தமிழ் பேராசிரியரை நடிக்க வைத்து அவரது வாயிலாகவே இரட்டை அர்த்த வசனங்களை பேசி தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் கொலை செய்ய துணிந்திருக்கிறார்கள்.
தமிழ் காப்பாற்றிய கவிஞர்கள் ஆயிரம்!! இனி தமிழை காப்பாற்றும் கவிஞர்களாய் நாம்!! - யட்சி