செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பணம் கொடுக்கக்கூடாது ஏன்? - Seithipunal
Seithipunal


உலகில் மனிதராய் பிறந்த அனைவரும் உதவி செய்யவே விரும்புகிறார்கள். இருந்தும் சிலர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கடன் கொடுக்க மறுக்கிறார்கள்.

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பணம் கொடுக்கக்கூடாது ஏன்?

செவ்வாய்க்கிழமை முருகனுக்கும், வெள்ளிக்கிழமை லட்சுமிக்கும் உகந்த நாட்களாக கருதப்படுகிறது.

நாம் வணங்கும் இந்த இரண்டு தெய்வங்களும் நமக்கு செல்வ வளத்தை கொடுப்பதுடன், அவைகள் நமது வீட்டில் நிரந்தரமாக இருப்பதற்கும் அருள்புரிகிறார்கள்.

இதனால் நாம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பணம் வைத்து இருக்கும் பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்வதை தவிர்க்க வேண்டும்.

இல்லையெனில், நம்மிடம் இருக்கும் அனைத்து செல்வ வளங்களும் நம்மை விட்டு சென்றுவிடும் என்பது ஒரு ஐதீகமாகும்.

மேலும் அத்தியாவசிய சில முக்கியமான செயல்பாடுகளை தவிர்த்து, இந்த இரண்டு கிழமைகளிலும் பணம் வைத்திருக்கும் பெட்டியை திறக்கவே கூடாதாம்.

செய்ய வேண்டியவை :

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் 5 முகம் கொண்ட குத்துவிளக்கு ஏற்றி திருமகளை வழிபட வேண்டும்.

அதிகாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை உள்ள காலப்பகுதிக்கு 'பிரம்ம முகூர்த்தம்" என்று பெயர். அப்போது விழித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும்.

செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.

சங்கு, நெல்லிக்காய், பசுவின் சாணம், கோ ஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.

லட்சுமி நம்மைவிட்டு போகாமல் இருக்க தவிர்க்க வேண்டியவை :

ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசற்படியில் நின்று கொடுக்கக்கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசற்படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும். 

குத்துவிளக்கை தானாக அணைய விடக்கூடாது, ஊதியும் அணைக்கக்கூடாது. புஷ்பத்தினால் அணைக்க வேண்டும்.

வாசற்படி, அம்மி, ஆட்டுக்கல், உரல் இவைகளில் உட்காரக்கூடாது.

இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக்கூடாது.

விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறருக்கு கொடுக்கக்கூடாது.

ஈரத்துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

not give the money tuesday and friday


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->