திருமணப் பொருத்தத்தில்.. மகேந்திரப் பொருத்தம் ஏன் பார்க்க வேண்டும்? - Seithipunal
Seithipunal


திருமணம் ஆகப்போகும் ஆண், பெண் இருவருக்கும் மகேந்திர பொருத்தம் மிகவும் முக்கியம். இந்த பொருத்தம் இருந்தால்தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பொருத்தம் குழந்தை பாக்கியத்தையும், செல்வத்தையும் அளிக்கிறது.

சந்ததி விருத்தி உண்டா? இல்லையா? என்பதை இதன் மூலம் கண்டறியலாம். இது பெண்ணின் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணிய தொகை 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆவது நட்சத்திரம் என்றால் மகேந்திர பொருத்தம் உண்டு எனலாம்.

2, 3, 5, 6, 8, 9, 11, 12, 14, 15, 17, 18, 20, 21, 23, 24, 26, 27 ஆகிய நட்சத்திரங்களுக்கு மகேந்திர பொருத்தம் இல்லை. இப்பொருத்தம் அவசியம்தான். ஆனால் முக்கியமானது அல்ல. இப்பொருத்தம் இல்லையெனில், ஜாதகங்களில் புத்திர ஸ்தான பலனைக்கொண்டு ஜோதிடர்கள் கணிப்பார்கள்.

மகேந்திர பொருத்தம் பொருள் வளத்தையும், குழந்தை பாக்கியத்தையும் குறிப்பதாகும். பெண் நட்சத்திரத்திற்கு 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25ம் நட்சத்திரமாக ஆண் நட்சத்திரம் வரவேண்டும். 

4, 7, 10ம் வீடுகளை கேந்திர வீடுகள் என அழைப்பது போல பெண் நட்சத்திரத்திற்கு 4, 7, 10ம் நட்சத்திரங்கள் கேந்திர நட்சத்திரங்களாக கருதப்படுகிறது.

பெரும்பாலும் அனைவரும் ஆசைப்படுவது வளமான வாழ்க்கை, சுகபோகங்கள், ஆரோக்கியமான நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டும் என்பதாகும். இதைப் பல கிரகங்கள் தந்தாலும், எல்லாவற்றிற்கும் சிகரமாக இருந்து வாரி வழங்கக்கூடிய தன்மை சுக்கிரனுக்கு மட்டுமே உண்டு.

சுக்கிரன் நமது ஜாதகக் கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். லக்னத்துக்கு 1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களில் பலம் பெற்று இருந்தால், நல்ல பலன்களை வாரி வழங்குவார். 

அதே வேளையில், ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சம் பெற்றோ 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்திருந்தாலோ, பாப கிரகச் சேர்க்கை பெற்றுப் பலம் குறைந்து இருந்தாலோ எதிர்மறையான பலன்கள் ஏற்படலாம்.

மகேந்திர பொருத்தம் இருந்தாலும், ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன், குரு நிலையை ஜோதிட ரீதியாக கணிக்க வேண்டும். லக்னத்துக்கு 5ஆம் இடத்தையும், ராசிக்கு 5ஆம் இடத்தையும் பார்த்தல் வேண்டும். 

ஆணின் ஜாதகத்தில் சுக்கிரனும், பெண் ஜாதகத்தில் குருவும் நன்றாக இருந்தால் குழந்தை பாக்கியத்தில் பிரச்சனை இருக்காது. ஆனால் 5ஆம் இடத்துக்கு அதிபதி பாவ கிரகத்துடன் தொடர்பில் இருக்கிறாரா என்பதையும் தகுந்த ஜோதிடரின் துணையுடன் ஆராய வேண்டும். இது சரியில்லாவிட்டால் மகேந்திர பொருத்தம் இருந்தாலும் குழந்தை பாக்கியத்தில் பிரச்சனை இருக்கும்.

ஆனால், மனதில் நல்ல விதைகளை விதைக்கக் கூடியவன் சந்திரன். நாம் எண்ணியதை செயல்படுத்தக் கூடியவன் சுக்கிரன். எண்ணம் நல்லதாக இருந்தால் நல்லவையே கிடைக்கும். பரிகாரம் செய்வதால் குழந்தை பாக்கியம் கிட்டும்.
 

English Summary

makenthira poruththam


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal