வெளியே வர மனமில்லை.. விநோதமாகக் காட்சியளிக்கும்.. சிலி பளிங்கு குகைகள்..! - Seithipunal
Seithipunal


இந்த உலகில் பல அதிசயங்கள் நிகழ்ந்துக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் நமக்குத்தான் தெரிவதில்லை என்று கூறலாம். 

பூமியில் இயற்கையாகவே குகைகள் உருவாகின்றன. ஆனால் அந்த குகைகளுக்கு சென்றால் நமக்கு பயமாக இருக்கும். 

ஆனால் இந்த குகையின் உள்ளே சென்றால் வெளியே வருவதற்கு மனமே இருக்காது என்று கூட சொல்லலாம். ஏன்? அந்தக் குகையில் அப்படி என்னத்தான் இருக்கும். 

நமக்கு கொஞ்சம் புரியாத புதிராகவும் மற்றும் அதிசயமாகவும் இருக்கிறதல்லவா? வாருங்கள் நாம் அதைப் பற்றிப் பார்க்கலாம். 

எங்கு அமைந்துள்ளது இந்த அழகிய குகை?

இயற்கை அற்புதங்களின் படைப்பாக இருக்கும் இந்த குகை சிலி மற்றும் அர்ஜென்டினாவின் எல்லையில் பேட்டகொனியா எனும் பகுதியில் அமைந்துள்ளது. 

குகையின் உட்புறத்தில் நீல நிற பாறைகள், அங்குள்ள ஏரியின் தண்ணீரில் விளையாடுவது போல நம் கண்களுக்கு அழகாக தோற்றமளிக்கும். 

இந்த குகையின் அடிப்பாகத்தில் ஏரிகள் ஓடுகின்றன. அவற்றில் ஓடும் தண்ணீரின் நிறம் பச்சை மற்றும் நீல வண்ணங்களில் இருக்கின்றன. இவற்றின் பிரதிபலிப்பாலேயே இந்த குகை விநோதமாக நமக்கு காட்சியளிக்கிறது.

கடலில் பயணம் செய்த பிறகு மட்டுமே இந்த குகையை சென்றடையலாம். இந்த பயணம் ஒரு நீண்டதாகவும் மற்றும் கடினமாகவும் இருக்கும். 

பளிங்கு குகை பனிப்படலத்தால் ஆன ஒரு அரங்கம் போல் இருக்கும். பகல் நேரத்தில் இந்த இடத்திற்கு சென்றால் சூரிய ஒளியால் பளிங்கு குகை நம்முடைய கண்களைப் பறிக்கும் வகையில் காட்சியளிப்பதாக கூறப்படுகிறது. 

கடல் அலைகளில் உள்ள உப்பு படலத்திலான குகைதான் பளிங்கு போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கிறது. 

உப்புகளின் வௌ;வேறு பண்புகள் காரணமாக நிறம் மாறி மாறி பளிங்கு குகைகளாக தோற்றமளிக்கிறன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cave of the crystals in argentina


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal