பதற்றம்! பாலியல் குற்றச்சாட்டு கைது தப்பியோட்டம்...! - தூத்துக்குடியில் சினிமா காட்சியை மிஞ்சிய சம்பவம்...!
Tension harassement suspect escapes arrest incident Thoothukudi that surpassed cinema scene
தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதியில் வசித்து வந்த வசந்தகுமார் மீது, சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கடும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில், கடந்த 6-ம் தேதி அனைத்து மகளிர் காவல் நிலைய காாவலர்கள், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

மேலும், தலைமறைவாக இருந்த வசந்தகுமார், நேற்று காாவலர்களால் கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன் மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது, எதிர்பாராத விதமாக காாவலர்களின் கண்காணிப்பிலிருந்து திடீரென தப்பித்து ஓடினார்.இதனால் அதிர்ச்சியடைந்த காாவலர்கள் உடனடியாக அவரை விரட்டி பிடிக்க முயன்றனர்.
சில நிமிடங்கள் நீண்ட பதற்றமான துரத்தலுக்குப் பிறகு, வசந்தகுமாரை மீண்டும் மடக்கிப் பிடித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் குறுகிய நேரம் பரபரப்பை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து, பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வசந்தகுமார் சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
Tension harassement suspect escapes arrest incident Thoothukudi that surpassed cinema scene