ஆசைக்கு இடையூறாக இருந்த கணவன்! ரூ.12 லட்சம் கொடுத்து தீர்த்துக்கட்டிய மனைவி...! - கள்ளக்காதலனுடன் சிக்கியது எப்படி?
Husband who obstacle her desire Wife paid 12 lakhs settle matter How did she get caught murderer
ஆந்திரப் பிரதேசம் மாநிலம் அகிரிபள்ளி மண்டலத்தை உலுக்கிய கொடூரக் கொலை சம்பவத்தில், கள்ளத்தொடர்பு பின்னணியில் கணவர் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.வடலமானு பகுதியைச் சேர்ந்த ரெட்டி சுலோமன் ராஜு என்பவரின் மனைவி துர்காமணி.
இவருக்கு கிருஷ்ணா மாவட்டம் கண்ணவரம் மண்டலத்தைச் சேர்ந்த பாலகனி வெங்கண்ணபாபு என்பவருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த உறவு குறித்து கணவர் சுலோமன் ராஜுவுக்கு தெரியவந்ததும், மனைவியை கடுமையாக கண்டித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ திட்டமிட்ட துர்காமணி, கணவரை தீர்த்துக்கட்ட சதி திட்டம் தீட்டியதாக விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இந்த திட்டம் குறித்து வெங்கண்ணபாபுவிடம் தெரிவித்த துர்காமணி, அவரின் உதவியுடன் கூலிப்படையினரை அணுகியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து பாபுலபாடு மண்டலத்தைச் சேர்ந்த கலத்தோட்டி மணிகாந்தா மற்றும் கலத்தோட்டி சாய் சீனிவாஸ் ஆகியோரிடம் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணவரை கொலை செய்ய ரூ.12 லட்சம் தருவதாக துர்காமணி உறுதியளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் திட்டமிட்டபடி சுலோமன் ராஜுவை கடத்திச் சென்ற கூலிப்படையினர், செல்பேசி சார்ஜிங் கம்பியால் அவரது கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்ததாக காாவலர்கள் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.கொலைக்குப் பிறகு உடலை அங்கேயே வீசிவிட்டு, குற்றவாளிகள் காரில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பு சம்பவம் தொடர்பாக அகிரிபள்ளி காாவலர்கள் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையின் முடிவில், துர்காமணி, கள்ளக்காதலன் வெங்கண்ணபாபு மற்றும் கூலிப்படையினரை காாவலர்கள் கைது செய்தனர். மேலும் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கார், 5 செல்பேசிகள், பீர் பாட்டில்கள், பவர் பேங்க் சார்ஜிங் கேபிள் மற்றும் பணம் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Husband who obstacle her desire Wife paid 12 lakhs settle matter How did she get caught murderer